தமிழ்நாடு

tamil nadu

இளையராஜா பிறந்தநாள்... 1000 படங்களின் பெயர்களை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தல்! - Ilaiyaraaja birthday art

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 12:20 PM IST

Ilaiyaraaja birthday: இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களின் பெயர்களை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார் ஆசிரியர் அன்புச்செல்வன்.

இளையராஜா ஓவியம்
இளையராஜா ஓவியம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

திண்டுக்கல்: இளையராஜா பிறந்த நாளை முன்னிட்டு, அவர் இசையமைத்துள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களின் பெயர்களை கொண்டு ஓவியம் வரைந்து அசத்தியுள்ளார் பழனியைச் சேர்ந்த ஆசிரியர் அன்புச்செல்வன்.

இளையராஜா ஓவிய காட்சி (Video Credits - ETV Bharat Tamil Nadu)

இசைஞானி இளையராஜா இன்று தனது 81ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இளைராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பழனியைச் சேர்ந்த ஓவியர் அன்புச்செல்வன், இளையராஜா இசையமைத்த 1,000 திரைப்படங்களின் பெயர்களை கொண்டு, இளையராஜாவின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்துள்ளார். இவர் பழனியில் உள்ள அரசுப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

அவர் வரைந்துள்ள ஓவியத்தில், இளையராஜா இசையமைத்த முதல் படமான 'அன்னக்கிளி' முதல் தற்போது இசையமைத்துள்ள 'விடுதலை 2' வரையில் திரைப்படங்களின் பெயர்களை ஓவியத்தில் பயன்படுத்தியுள்ளார். இசைஞானி இளையராஜா 45 ஆண்டுகால இசை பயணத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் பிறந்தநாள் பரிசாக இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளதாக ஓவியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இந்தியன் 2 இசை வெளியீட்டு விழா: 'இந்தியன் என்ற எனது அடையாளத்தை யாராவது பிரிக்க நினைத்தால்..!' - கமல்ஹாசன் - Indian 2 Audio Launch

ABOUT THE AUTHOR

...view details