தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உடலில் கட்டி இருந்த கடப்பா கல்.. ஜெயக்குமார் மரணத்தில் வெளியான பரபரப்பு புகைப்படங்கள்! - Jayakumar death photos - JAYAKUMAR DEATH PHOTOS

Tirunelveli Congress Leader Jayakumar: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் தரும் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Tirunelveli Congress Leader Jayakumar Photo
Tirunelveli Congress Leader Jayakumar Photo (Credits to ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 7, 2024, 9:55 PM IST

திருநெல்வேலி: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம் தரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. எரிந்த நிலையில் அவரது தோட்டத்திலிருந்து ஜெயக்குமாரை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ஜெயக்குமார் உடலுக்குப் பின்னால் முதுகில் கடப்பா கல் இரும்புக் கம்பியால் கட்டப்பட்டுள்ளது. மேலும், ஜெயக்குமாரின் முகம், கழுத்து, கை, கால்கள் என அனைத்திலும் இரும்புக் கம்பிகள் சுற்றப்பட்டு இருக்கிறது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டபடி, வேறொரு இடத்தில் ஜெயக்குமாரை இரும்புக் கம்பிகளால் கை கால்களைக் கட்டி கொலை செய்து, பின் காரில் அவரது வீட்டுக்கு எடுத்து வந்து வீட்டுத் தோட்டத்திலே எரித்துச் சென்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி காணாமல் போன ஜெயக்குமார், 3ஆம் தேதி அவரது மகனால் உவரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 4ஆம் தேதி அவரது தோட்டத்திலேயே எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு:புகைப்படங்களின் தன்மையால் அதனை ஈடிவி பாரத் வெளியிடவில்லை

இதையும் படிங்க:காட்டிக்கொடுத்த குரல்வளை? - உடற்கூறாய்வு அறிக்கையால் சூடாகும் ஜெயக்குமார் வழக்கு! - Tirunelveli Jayakumar Case

ABOUT THE AUTHOR

...view details