சென்னை:சென்னை தாம்பரம் ரயில்வே பணிமனை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மின்சார ரயில்கள் இருமார்க்கத்திலும் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் தாம்பரம் - சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரயில் சேவை பாதிப்பாலும், பொதுமக்கள் தங்களின் பயணத்திற்குச் சொந்த வாகன பயன்பாட்டினை அதிகரித்திருப்பதாலும், தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் பணியில் இருந்தாலும், குறிப்பாக கார்கள், இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகளவில் அணிவகுத்து நிற்கின்றன.