திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட விடையூர் - கலியனூர் இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றில் மேம்பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டு, ரூ.3.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
மேம்பால பணிகள் ஆரம்பித்து, 5 ஆண்டுகளை தாண்டியும் பாலத்தின் பணிகள் முடிவுறாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினார். இதனால் அரசு கூடுதலாக ரூ.3.60 கோடி கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒதுக்கீடு செய்து பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டது. அதன்படி, பாலத்தின் பணிகளும் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
பகுதி மக்கள் பேட்டி (ETV Bharat Tamilnadu) ஆனால் தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையினால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், தொடர்ந்து நீரின் அளவும் அதிகரித்து வரும் நிலையில் மேம்பாலம் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சேற்றில் இறங்கியும், பாலத்தின் மீது ஆபத்தான முறையில் ஏறியும் செல்கின்றனர். அவரசத்திற்கு கூட மருத்துவமனைக்கு செல்ல முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக பள்ளி மாணாவர்களிடையே நமது செய்தியாளர் சுரேஷ் பாபு பேட்டி எடுத்தார். அப்போது பள்ளி மாணவர்கள் கூறுகையில், "கனமழை காரணமாக மேம்பால பணிகள் நிறுத்தப்பட்டது. 5 வருடத்திற்கும் மேலாக பாலம் பணிகள் முடிவடையாமல் உள்ளன. மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு செல்ல முடியவில்லை.
மாணவிகள் பேட்டி (Credits - ETV Bharat Tamilnadu) கடந்த 4 நாட்களாக, பெய்த கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பாலம் பணிகள் முடவடையாததால் நாங்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. விரைவில் அரையாண்டு தேர்வு வர இருக்கும் நிலையில் அரசு எங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டுமென" தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அப்பகுதிமக்கள் கூறுகையில், "மேம்பால பணிகளை விரைந்து முடித்தால் எங்களுக்கும், பள்ளி மாணவர்கள், விவசாயிகளுக்கும் உதவியாக இருக்கும். பாலத்தின் பணிகள் பாதியிலேயே நிற்பதால், கம்பியை பிடித்து பாலத்தின் மீது ஏறி வர கஷ்டமாக இருக்கிறது. பாலத்தின் மீது தற்காலிகமாக மண் போட்டால் கூட இஸியாக இருக்கும். மேலும், பாலத்தை முழுவதுமாக கட்டி முடித்தால் இன்னும் உதவியாக இருக்கும்.
பாலத்தின் பணிகள் முடியாததால், பள்ளி செல்லும் மாணவர்கள் பல கிலோமீட்டர் சுற்றி தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. பாலத்தின் பணிகள் முடிவடையாததால், பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட மேல் விளாகம், கீழ் விலாகம் மரத்துக்குப்பம், குப்பம் கண்டிகை, மணவூர் உள்ளிட்ட 6 ஊர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக விரைவில் இந்த மேம்பாலம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட வேண்டும்" என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.