திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாமல் மிதமான வெயில் அடித்து வந்த நிலையில், இன்று காலை முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
குறிப்பாக பாளையங்கோட்டை டவுன், தச்சநல்லூர், சமாதானபுரம் போன்ற மாநகரப் பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்து. அதேபோல், தச்சநல்லூர் பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது.
மேலும் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், ரெட்டியார்பட்டி, வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி, விகே புரம், பாபநாசம் போன்ற மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளிலும் மிதமான மற்றும் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருவதால், மழை இன்று முழுவதும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு - குற்றம் சாட்டப்பட்ட 17 காவல்துறை அதிகாரிகள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!