தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சேலம் அரசு மருத்துவமனையில் ஊழியர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்! - SALEM GOVERNMENT HOSPITAL ISSUE

சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களுக்கு கட்டாய கட்டண வசூல் செய்யப்படுவதால் ஊழியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

சேலம் அரசு மருத்துவமனை
சேலம் அரசு மருத்துவமனை (http://gmkmc.com/ - official site)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2025, 1:06 PM IST

சேலம்: அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிப்பதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (Government Mohan Kumaramangalam Medical College Hospital) சேலத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு நாள்தோறும், சேலம், நாமக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த மருத்துவமனையில் பல்வேறு துறைகளில் அரசு மருத்துவர்கள், செவியலியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர மற்றும் தற்காலிக பணியாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், இதுவரையில் மருத்துவமனைக்கு வருகை புரியும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மருத்துவமனை சார்பாக எந்த கட்டணமும் வசூல் செய்யவில்லை.

இந்த நிலையில், அரசு மருத்துவமனை நிர்வாகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கு, நிர்வாகத்தின் சார்பாக நேற்று (ஜனவரி 03) வெள்ளிக்கிழமை வாட்ஸ்ஆப் மூலமாக சுற்றறிக்கை (Circular) அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், "இரு சக்கர வாகனம் (Two Wheeler pass) மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு (Car pass) ரூ.15 கட்டணமாக செலுத்தி வாகனத்திற்கான அனுமதி சீட்டினை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:லீக்கான மாணவி எஃப்ஐஆர்.. கண்காணிப்பில் 14 பேர்.. இரண்டு சேனல்கள் மீது வழக்கு பதிவு..!

இதனை மருத்துவமனையின் உள்தங்கு மருத்துவர் (Resident Medical Officer - RMO) சீல் வைத்து, கையெழுத்திட்டு அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூகுள் பே (Google Pay) மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம்," என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.

சேலம் அரசு மருத்துவமனை நிர்வாக சுற்றறிக்கை (ETV Bharat Tamil Nadu)

அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனத்திற்கு எதற்காக அனுமதி சீட்டு? கட்டாய கட்டண வசூல் ஏன்? எதற்காக கட்டணம் செலுத்தி வாகன அனுமதி சீட்டு பெற வேண்டும்? செலுத்தப்படும் கட்டணம் யாருக்கு செல்கிறது? என்று ஊழியர்கள் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details