வேலூர்: வேலூர் மாவட்டம் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் (52) - எலிசபெத் ராணி(45) தம்பதி. இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் இளைய மகள் பெட்டினா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், குடிபாலாவில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பயின்று வருகிறார்.
மகளைப் பார்க்கச் சென்ற பெற்றோர் கண்டெய்னர் லாரி விபத்தில் பரிதாப உயிரிழப்பு! - Couple died accident in Vellore - COUPLE DIED ACCIDENT IN VELLORE
Vellore accident: வேலூரில் கண்டெய்னர் லாரி ஏறியதில் தம்பதி உயிரிழந்தது தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published : Jul 14, 2024, 9:48 PM IST
இவரைப் பார்ப்பதற்காக வார இறுதியில் தம்பதி சென்று வருவது வழக்கம். அந்த வகையில், இன்று தங்கள் மகள் பெட்டினாவை பார்ப்பதற்காக சுரேஷ்குமார் மற்றும் எலிசபெத்ராணி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இந்த நிலையில், காட்பாடி அடுத்த தமிழக - ஆந்திர எல்லை பகுதியான து கிறிஸ்டியன் பேட்டை அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கண்டெய்னர் லாரியைக் கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கண்டெய்னர் லாரி சுரேஷ்குமார் மற்றும் எலிசபெத் தம்பதி மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்பாடி போலீசார் இருவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக வேலூர் அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.