தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மது அருந்தி தகராறு செய்த மகன்.. கட்டையால் அடித்துக் கொன்ற பெற்றோர்! - Parents Killed Son - PARENTS KILLED SON

Parents Killed Son: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை பெற்றோர் கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்
திருவாரூர்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 26, 2024, 5:30 PM IST

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே வடகோவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கஜேந்திரன் - மாலா தம்பதி. இவர்களுக்கு வெங்கடேஷ் பிரசாத், விக்னேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில், மூத்த மகன் வெங்கடேஷ் பிரசாத் தினமும் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல், நேற்று நள்ளிரவும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் பிரசாத், பெற்றோர் மற்றும் சகோதரர் விக்னேஷ் ஆகியோரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் வெங்கடேஷ் பிரசாத்தின் சகோதரர் விக்னேஷ் ஆகிய மூன்று பேரும், கட்டையால் வெங்கடேஷ் பிரசாத்தை தாக்கியுள்ளனர். இதில் நிலைகுலைந்து வெங்கடேஷ் பிரசாத் கீழே விழுந்துள்ளார்.

இதையடுத்து வெங்கடேஷ் பிரசாத் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வீட்டின் பின்புறம் இருந்த வயலில் தூக்கி வீசியுள்ளனர். இந்நிலையில், இன்று காலை வயலுக்குச் சென்றவர்கள் சடலமாகக் கிடந்த வெங்கடேஷின் உடலைப் பார்த்த நிலையில், கூத்தாநல்லூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வெங்கடேஷ் பிரசாத்தின் உடலை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், வெங்கடேஷ் பிரசாத்தின் பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் விக்னேஷ் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு; ஜூன் 12-க்கு ஒத்திவைப்பு! - Anitha R Radhakrishnan

ABOUT THE AUTHOR

...view details