சென்னை:போரூர் அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரணிபுத்தூர் பகுதியில் தங்களுக்குச் சொந்தமான நிலத்தை பட்டா மாற்றம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு பட்டா மாற்றம் செய்யாமல் அவரது மனு கிடப்பில் இருந்துள்ளது.
இது குறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுள்ளார். அப்போது அவர், “லட்சம் கொடுத்தால் மட்டுமே பெயர் மாற்றம் செய்து தரப்படும்” என கூறியுள்ளார். இதையடுத்து செல்வராஜ், பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் லட்சம் கேட்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவு செய்து, அதில் முதலமைச்சரை டேக் செய்து பதிவிட்டிருந்தார்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து, கடலூர் மாவட்ட ஆட்சியர் செல்வராஜை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். பின்னர், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, தன்னுடைய கோரிக்கையை உடனே நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து செல்வராஜ் வீடியோ வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், உரிய விசாரணை செய்யப்பட்டு லஞ்சம் கேட்டது உறுதி செய்யப்பட்டால், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், லட்சம் கேட்ட பரணிபுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் கிரண்ராஜ் சஸ்பெண்ட் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:'ஜெண்டர் ரிவீல்' செய்து வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு.. சர்ச்சையில் சிக்கிய யூடியூபர் இர்பான்! - Irfan Gender Reveal Issue