தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகங்கையில் கண் மை டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழப்பு; சோகத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம் - 1year old child died

1year old child died: சிவகங்கையில் கண் மை டப்பாவை விழுங்கிய ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவமனை
சிவகங்கை அரசு மருத்துவமனை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2024, 9:26 PM IST

சிவகங்கை:ஒரு வயது குழந்தை கண் மை டப்பாவை விழுங்கிய நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவர் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர், தனது மனைவியின் சகோதரி குழந்தையினுடைய பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சிவகங்கை காளவாசல் பகுதியில் உள்ள அவரின் இல்லத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.

அங்கு, சூரிய பிரகாஷின் ஒரு வயது மகன் தரன்தேவாவுக்கு அவரது தாய் தலைசீவி, பொட்டு வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து, குழந்தை அருகில் இருந்த கண் மை டப்பாவை எடுத்து வாயில் போட்டு விழுங்கியுள்ளது. அதைக்கண்ட அக்குழந்தையின் தாய் வாயிலிருந்து மை டப்பாவை எடுக்க முயற்சித்துள்ளார். ஆனால், குழந்தை மை டப்பாவை விழுங்கிய நிலையில் திடீரென அதற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. மேலும், குழந்தையின் வாயிலிருந்து இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் உடனடியாக குழந்தையை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நிலையில், கண் மை டப்பாவை விழுங்கி குழந்தை இறந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:ஆசிரியர் தின விழா..தலைமை ஆசிரியருக்கு பண மாலை அணிவித்து வாழ்த்திய மாணவ, மாணவிகள்!

ABOUT THE AUTHOR

...view details