திருநெல்வேலி:நெல்லை சந்திப்பு உடையார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமையா (71). இவர் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களது மகள்களுக்கு திருமணம் முடித்துக் கொடுத்த நிலையில், ராமையா பேச்சியம்மாள் தம்பதியனர் அப்பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இவர்களது வீடு மிகவும் பழமையான நிலையில் இருந்து வரும் சூழலில், கடந்த சில தினங்களாக நெல்லை மாவட்டத்தில் பெய்து வந்த கனமழையால் வீடு வலுவிழந்து காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீட்டின் சமையலறையில் நேற்று இரவு பேச்சியம்மாள் சமையல் பணி செய்து கொண்டிருந்த போது, திடீரென சமையலறையின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதன் இடிப்பாடுகளில் பேச்சியம்மாள் சிக்கிக்கொண்டு அலறியுள்ளார்.
இதையும் படிங்க:மழை பாதிப்பு.. திருநின்றவூர் ஈஷா ஏரியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு!
அவரது அலறல் சத்த கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பேச்சியம்மாளை உடனடியாக மீட்டனர். மேலும், நெல்லை சந்திப்பு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டதுடன் மீட்கப்பட்ட மூதாட்டி நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து வீட்டிற்குள் யாரும் செல்லாதவாறு காவல்துறையினர் பூட்டி சீல் வைத்ததுடன் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையில் இன்னும் வடகிழக்கு பருவமழை தீவிரமடையவில்லை.. அவ்வப்போது மட்டும் மழை பெய்து வருகிறது. நேற்று மழை இல்லாமல் வெயில் தாக்கம் காணப்பட்ட நிலையில், வீட்டு சுவர் இடிந்து விழுந்த விபத்தில் மூதாட்டி காயமடைந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்