தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது! - Nurse Self Delivery Issue - NURSE SELF DELIVERY ISSUE

Nurse Self Delivery Issue: சென்னையில் தனக்குத்தானே பிரசவம் பார்த்து குழந்தையைக் கொன்ற செவிலியரை போலீசார் கொலை வழக்கில் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

Nurse Arrested for Self Delivery Case
கைது தொடர்பான கோப்பு படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 9:52 AM IST

சென்னை:கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா. 24 வயதுடைய இவர், சென்னை தியாகராய நகரில் தங்கி, கடந்த ஒரு வருடமாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த செல்வமணி (29) என்பவரும், வினிஷாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதுமட்டுமல்லாது, இவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலேயே நெருக்கமாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் வினிஷா கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையே, ஏழு மாத கர்ப்பிணியாக இருந்த வினிஷாவிற்கு, ஏப்ரல் 30ஆம் தேதி அதிக அளவில் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வினிஷா தனக்குத்தானே பிரசவம் பார்த்ததாகவும், குழந்தையின் இரு கால்களையும் வினிஷாவே வெட்டி எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதன் காரணமாக, குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்ததாகக் கூறப்படும் நிலையில், உயிரிழந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்டுவிட்டு, உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பத்திரப்படுத்திய மருத்துவர்கள், வினிஷாவை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில், தியாகராய நகர் போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த பின்பு, குழந்தை திட்டமிட்டு கொல்லப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில், வினிஷாவின் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், தற்போது வினிஷாவை கைது செய்து நீதிமன்றக்காவலில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:படிக்காதவன் பட அம்பிகா பாணியில் நூதனமாக செயல்பட்ட பெண்கள்.. திருப்பூர் பேருந்து நிலையத்தில் நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details