தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுகவிற்கு எதிராக சீமான் உள்ளிட்ட அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும்" - நடிகை கஸ்தூரி! - ACTRESS KASTHURI

"கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு சீமான் உள்ளிட்ட அனைவரும் ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும்" என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள்
நடிகை கஸ்தூரி மற்றும் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2024, 5:42 PM IST

திருச்சிராப்பள்ளி:இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதன ஆதரவு வழக்கறிஞர்களுக்கான கருத்தரங்கு திருச்சி ஸ்ரீரங்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி கூறுகையில், "நவம்பர் மூன்றாம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி பேசாத விஷயம்தான் மிகப்பெரிய செய்தியானது. அன்று பேசியதை மீண்டும் எப்படி ஆக்கப்பூர்வமாகவும், சட்ட ரீதியாகவும் அணுகுவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம்.

பொய் வழக்குகள்

பிராமணர்கள் ஏதாவது குரல் கொடுத்தால் அவர்கள் மீது பொய் வழக்கு போடுவதும், அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் நடக்கிறது. இதை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தோம். 2026-இல் திமுக கூட்டணி மைனஸில் செல்லும் என விஜய் கூறியுள்ளார். அப்படி நடந்தால் விஜய்க்கு ஆதரவு கொடுக்கலாம்.

நீண்ட நாட்களாக திமுகவுடன் வாக்கப்பட்டு விசிக அவர்களுடன் இருக்கிறது. திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வாய்ப்பில்லை. விசிகவில் திருமாவளவன் இருக்க வேண்டும் அல்லது ஆதவ் அர்ஜுனா இருக்க வேண்டும் என்கிற நிலை தற்போது உருவாகி உள்ளது. சினிமா செய்திகளைப் பார்க்கவில்லை என உதயநிதி கூறியுள்ளது ரெட் ஜெயிண்ட் குறித்து பேசியுள்ளார் என்பது தெரிகிறது.

நடிகை கஸ்தூரி செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)

உதயநிதிக்கு தரக்குறைவாகப் பேசுவது ஒன்றும் புதிது அல்ல. ஏற்கனவே உதயநிதி சனாதனம் குறித்து பேசி உள்ளார். ரஜினி குறித்தும் தரக்குறைவாகப் பேசியுள்ளார் தற்பொழுது விஜய், ஆதவ் அர்ஜீன் குறித்தும் பேசி உள்ளார். திரும்பத் திரும்ப அவர் அப்படி தான் பேசுகிறார். உதயசூரியனுக்கு எதிர் இரட்டை இல்லை தான் என கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க:"நானும் இறுமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளிலும் வெற்றி நிச்சயம்" - கனிமொழி சவால்!

விஜய்யைப் பயன்படுத்தி அதிமுகவின் உண்மையான முகத்தை மறைக்கிறார்கள். இது ஒரு வியாபார தந்திரம். ஒரு கட்சிக் கூட்டணிக்கு எதிராக அனைத்து கட்சிகளும் தனித் தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அனைத்து கட்சிகளும் ஒரே குடையின் கீழ் வந்தால் நன்றாக இருக்கும். விஜய், இபிஎஸ், அண்ணாமலை ஆகியோரை உசுப்பேற்றி விட்டு திமுக பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து கொண்டிருக்கிறார்கள்.

சீமான் என்னை திட்டினாலும் பரவாயில்லை . திமுகவை வீழ்த்த அவர் கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டு ஓர் அணியில் ஒன்றிணைய வேண்டும். மக்களின் ஒரே ஆசை திமுக-வை வெளியேற்ற வேண்டும் என்பது தான். அதை திமுகவை எதிர்க்கும் அனைவரும் ஒரே குடையின் கீழ் சேர்ந்து செய்ய வேண்டும்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details