சென்னை:சுப. தமிழ்ச்செல்வன் 17ஆம் ஆண்டு நினைவு தினத்தை அவரது உருவப் படத்திற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறுகையில், “விஜயின் அடிப்படையே தவறாக உள்ளது. கர்நாடக, கேரள மாநிலங்களின் பிறப்புக்கு வாழ்த்து சொன்ன விஜய் ஏன் தமிழுக்கு சொல்லவில்லை? கூட்டம் கூடினால் போதுமா? எனக்கு 36 லட்சம் பேர் கூடினார்கள். விஜயகாந்துக்கு மதுரையில் கூடாத கூட்டமா? என கேள்வி எழுப்பினார். மேலும், விஜயின் கொள்கையில் உடன்பாடு இல்லை, முரண்பாடு இருக்கிறது.
விஜய்க்கு ஓட்டு போடுபவர்கள் எனக்கு எப்படி ஓட்டு போடுவார்கள்? என்னுடைய கொள்கையை ஏற்பவர்களே எனக்கு ஓட்டு போடுவர். யாருடைய வாழ்க்கையையும் யாரும் பிரிக்க முடியாது. விஜய் அவர் கொள்கையின் உறுதியாக நின்று வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.
தொடர்ந்து திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்கள் என தவெக தலைவர் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு "விஷமும் விஷத்தை முறிக்கும் மருந்தும் எப்படி ஒன்றாகும். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை என்பது ஏமாற்று கொள்கை. தமிழ் தேசியம் என்றால், என்ன திராவிடம் என்றால் என்ன என்பது குறித்து தலைவர் கூறுவாரா அல்லது கட்சியில் உள்ள பிறர் கூறுவார்களா?
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடை ஏற்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா? அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டை ஏற்கிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா? திராவிடத்தின் பிதாமகன் பெரியார் என்ன சொல்கிறார். தெருவுக்கு இரண்டு மதுக்கடைகளை திறந்தது திராவிடம். திமுக வின் சமூக நீதி சமுக்காள நீதி கூட கிடையாது.
இதையும் படிங்க:தவெக கொள்கை அழுகிய கூமுட்டை; கருவாட்டு சாம்பார்.. 'இட்ஸ் வெரி ராங் ப்ரோ' என விஜயை விளாசிய சீமான்!