சென்னை:வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் வெப்ப அலை வீச இருப்பதால் ஓரிரு இடங்களில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் (திருநெல்வேலி மாவட்டம்) ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழை ஏதும் பதுவாகவில்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை:தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் பொதுவாக இயல்பை விட 2 டிகிரி – 4 டிகிரி செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. தமிழக கடலோரப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 41.4 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.6 டிகிரி செல்சியஸ், வேலூரில் 40.5 டிகிரி செல்சியஸ் மற்றும் தர்மபுரியில் 40.0 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 டிகிரி – 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி – 38 டிகிரி செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 22 டிகிரி – 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்.18) மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
இதை தொடர்ந்து ஏப்.19. ம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஏப்.20 ம் தேதி இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.21 மற்றும் ஏப்.22 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
ஏப்.23 மற்றும் ஏப்.24 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.