தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றம் செக்காரக்குடி கிராமத்தை சுற்றி பல கிராமங்கள் உள்ளது. இந்த பகுதிகளில் நேற்று (அக்.10) மாலை சுமார் 3 மணி நேரம் பலத்த மழை பெய்ததுள்ளது. இதன் காரணமாக செக்காரக்குடி, மகிழம்பூ ஓடையில் காட்ற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கனமழையும் மூழ்கிய பாலங்களும்:காட்ற்றாற்று வெள்ளம் காரணமாக கொம்புக்காரநத்தம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதேபோன்று செக்காரக்குடி ஊருக்கு செல்லும் பாலமும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காட்ற்றாற்று வெள்ளம் காரணமாக செக்காரக்குடி, நடு செக்காரக்குடி, மேல செக்காரக்குடி, சொக்கலிங்கபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் இல்லாமல் மழைநீர் சூழ்ந்த கிராமம்:மேலும் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் கிராமத்தின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் ரெடி - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்