தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“மீண்டும் தமிழகம் வந்துவிடலாம் என்று தோன்றுகிறது”- தாயகத்தை கண்டு பெருமிதம் கொள்ளும் அயலகத் தமிழர்கள்! - VERGALAI THEDI THITTAM IN TENKASI - VERGALAI THEDI THITTAM IN TENKASI

VERGALAI THEDI THITTAM: தென்காசி மாவட்டத்திற்கு 'வேர்களை தேடி' திட்டத்தின் கீழ் 100 அயலகத் தமிழர் வருகை தந்த நிலையில், அவர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனி நாடார் வரவேற்று பரிசுகள் வழங்கினர்.

அயலக தமிழர்களுக்கு தென்காசியில் வரவேற்பு
அயலக தமிழர்களுக்கு தென்காசியில் வரவேற்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 12, 2024, 9:05 PM IST

தென்காசி:அயலக தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தின் முதல்படியாக, தலைமுறைகளுக்கு முன்பு அயலகங்களுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்காக, 'வேர்களை தேடி' என்ற பண்பாட்டு பயணத் திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டு துறை, இந்துசமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை, வருவாய் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அயலக தமிழர் மாணவ, மாணவிகள் 100 பேர் வந்தனர்.

அயலகத் தமிழர்களுக்கு தென்காசியில் வரவேற்பு (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) இவர்கள் பயணத்தின் அடுத்தகட்டமாக தென்காசி மாவட்டத்தை அடைந்த நிலையில், தென்காசி ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பழனி நாடார் உள்ளிட்டோர் வரவேற்றனர். இந்த திட்டத்தின் கீழ் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை தமிழக அரசு செலவில் தமிழ்நாட்டுக்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு பண்பாட்டு பயணத்துக்கு, ஏற்பாடு செய்ய தமிழக முதலவர் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டப் பயணமாக தென்ஆப்ரிக்காவில் இருந்து 14 பேர், குவாடலூப்வில் இருந்து 2 பேர், மார்டினிக்வில் இருந்து 3 பேர், பிஜீயில் இருந்து 12 பேர், இந்தோனேஷியாவில் இருந்து 9 பேர், மொரிஷியஸில் இருந்து 13 பேர், ஆஸ்திரேலியாவில் இருந்து 3 பேர், மாலத்தீவில் இருந்து ஒருவர், கனடாவில் இருந்து 9 பேர், மியான்மரில் இருந்து 14 பேர், மலேசியாவில் இருந்து 4 பேர், இலங்கையில் இருந்து 9 பேர், பிரான்ஸில் இருந்து 3 பேர், ஜெர்மனியில் இருந்து ஒரு இளைஞர் என 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு வேர்களைத் தேடி திட்டத்தின் இரண்டாம் கட்ட பயணத்தை கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதலமைச்சாரால், சென்னையில் தொடங்கப்பட்டது.

இதனைத் தொடந்து அவர்கள் தென்காசி, மதுரை, சிவகங்கை, விழுப்புரம் ஆகிய, இடங்களுக்கு பயணித்து, மீண்டும் சென்னைக்கு வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சென்றடைய உள்ளனர். மேலும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் நடைபெறும் சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்கவும் உள்ளனர்.

இந்த அயலக தமிழிர்களை குற்றாலம் அருவிகளுக்கு அழைத்துச் செல்லவது. சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஆகியவை செய்து தரப்பட்டது. மேலும் அவர்களுக்கு சித்த மருத்துவம் மற்றும் வர்மக்கலை பற்றிய பயிற்சி பட்டறை வகுப்புகளும் நடத்தப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், அயலக தமிழர் நலன் மற்றும் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, உதவி ஆணையர்கள் புகழேந்தி, அசோக் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பேசிய அயலகத் தமிழர்களுள் ஒருவரான லாவண்யா கூறுகையில், “நான் தமிழ்நாடு குறித்து பல எதிர்ப்பார்ப்புகளுடன் வந்தேன், அவை அனைத்தும் பொறுந்தியதாக இந்த பயணம் இருந்தது. நான் மலேசிய தமிழர்களின் ஐந்தாவது தலைமுறை, இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தற்கு மிகவும் மகிழ்ச்சியடையகிறேன்” என்றார்.

மேலும் இதுகுறித்து பேசிய ஆர்த்தி, "இந்த பயணம் மூலம் தமிழ்நாடின் கலச்சாரங்களை அறிந்துக் கொண்டேன். நான் இந்தோனேஷியா நாட்டில் வசித்து வருகிறேன், எனது முன்னோர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். நான் இங்கு தஞ்சை பெரிய கோயில் போன்ற வரலாற்று சிறப்புமிக்க இடங்களை பார்த்ததில் மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:வியக்க வைக்கும் தமிழரின் வானியல் அறிவு.. வெளிவரும் 3000 ஆண்டு கால வரலாறு..!

ABOUT THE AUTHOR

...view details