தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'டெல்லி போனதும் கட்டாயம் பேசுவேன்' ஜிஎஸ்டி கலந்துரையாடலில் நிர்மலா சீதாராமன் உறுதி! - Nirmala Sitharaman

ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுவதாக தமிழக தொழில்துறையினருக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 12, 2024, 1:04 PM IST

Updated : Sep 12, 2024, 3:21 PM IST

கோயம்புத்தூர்: கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று சிறு, குறு தொழில் முனைவோர், பஞ்சாலை உரிமையாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து துறைகளை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்றனர்.

கொடிசியா மற்றும் லகு உத்யோக் பாரதி தொழில் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்நிகழ்வில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் பங்கேற்றார். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் தங்களது கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தொழில் முனைவோர் மத்தியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களின் குறைகளை கேட்பது அதிகாரிகளின் கடமை. அதிகாரிகளிடம் ஒரு வார்த்தை சொன்ன நிலையில், இன்று வந்து குறைகளை கேட்டு மனுக்களை பெற்று இருக்கின்றனர்.
அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.

இதையும் படிங்க: பெண்கள் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் பலி - விடுதி உரிமையாளர் கைது!

தொடர்ந்து பேசியவர், கொடிசியா அமைப்பு அரசின் திட்டங்களுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கின்றது.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிட்பி வங்கி கிளையினை கோவை குறிச்சி பகுதியில் திறந்துள்ளதை கூறிய அவர், 163 முக்கிய கிளஸ்டர்கள் இருக்கும் இடங்களில் சிட்பி குறித்து விசாரித்து இருப்பதாகவும், அடுத்த 3 வருடத்தில் 70 இடங்களில் கிளைகள் திறக்க சிட்பி முடிவு செய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

கோவையில் ஏற்கனவே திறக்கப்பட்ட சிட்பி கிளையில் ஒரு வருடத்தில் 491 கோடி ரூபாய் வங்கி கடன் கொடுக்க தீர்மானம் செய்து 314 கோடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும், இது தவிர்த்து அனைத்து நடவடிக்கையும் மொத்ததாக சேர்த்து 620 கோடி வரை கடன் கோவை சிட்பி கிளை கொடுத்துள்ளது என தெரிவித்தார்.

மேலும், தொழில்துறையினரிடம் அதிகாரிகள் மனுக்களை வாங்கி இருக்கின்றனர். டெல்லி சென்றதும் இது குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார். ஜிஎஸ்டி கோரிக்கைகள் குறித்த விவகாரம் தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சிலில் கட்டாயம் பேசுகின்றேன் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் துறையினர் மத்தியில் வாக்குறுதி அளித்தார்.

Last Updated : Sep 12, 2024, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details