தென்காசி: கூகுள் பிளே ஸ்டோரில் கிரைண்டர் (Grindr - Gay Dating App) என்ற செயலி பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த செயலியில் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் (Chat) செய்யும் வசதி உள்ளது. இந்த செயலியின் மூலம் சில நபர்கள், குற்ற நோக்கத்துடன் பொதுமக்களை குறிப்பாக, இளம் வயதினரை குறி வைத்து ஏமாற்றி ஆசை வார்த்தைகளைக் கூறி, தனிமையில் சந்தித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதும், அதன் மூலம், பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை வழிப்பறி செய்து வருவதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
தென்காசி மாவட்டத்தில் கிரைண்டர் செயலி மூலம் ஒருவரை சுரண்டை பகுதிக்கு வரவழைத்து, அவரை தாக்கி பணம், செல்போன் மற்றும் நகைகளைப் பறித்துச் சென்றது சம்பந்தமாக சுரண்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் முடிவில், தனிப் பிரிவு காவல்துறை பல்வேறு இடங்களில் 9 பேரை கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழை எப்போது துவங்கும்? - சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் கொடுத்த அசத்தல் அப்டேட்!