தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திருமாவுக்கு தெரியாம ஆதவ அர்ஜுனா பேசியிருக்கலாம்" - நம்புகிறார் ஆ.ராசா - a raja about aadhav arjuna

சினிமா நடிகர் துணை முதல்வராக வரும்போது, விசிக தலைவர் துணை முதல்வராக வரக்கூடாதா என்ற ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு நீலகிரி எம்.பி ஆ.ராசா பதிலடி கொடுத்துள்ளார்.

நீலகிரி எம்.பி ஆ.ராசா
நீலகிரி எம்.பி ஆ.ராசா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2024, 6:37 PM IST

Updated : Sep 23, 2024, 9:58 PM IST

ஈரோடு : பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் நீலகிரி எம்.பி ஆ.ராசா முடிவற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டத்துக்கான அடிக்கல் நாட்டியும் வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் நகர் பகுதியில் கட்டப்பட்ட சுகாதார நிலையம் மற்றும் அறிவு சார் மையத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதவாத ஒழிப்பு, இடது சாரி சிந்தனையுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இரண்டு விதமாக கருத்துகள் ஏற்பட்டதில்லை. புதியதாக சேர்ந்துள்ள ஒருவர் புரிதலின்றி கூட்டணி அறத்துக்கு எதிரான கூறிய கருத்துகள் ஏற்புடையது அல்ல.

திருமாவளவன் ஒப்புதலோடு அவர் பேசியிருக்க மாட்டார். பகுத்தறிவு, மதச்சார்பின்மை, அரசியல் சட்டத்தை கடைபிடிப்பவர் திருமாவளவன். இடதுசாரி சிந்தனையைத் தாண்டி தமிழ்மொழி, தமிழ் இலக்கியத்தை போற்றக்கூடியவர்.

இதையும் படிங்க :பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் மதுவிலக்கு உள்ளதா? - விசிக திருமாவளவன் கேள்வி - VCK Chief Thirumavalavan

சினிமா நடிகர் துணை முதல்வராக வரும்போது எங்கள் விசிக கட்சி தலைவர் துணை முதல்வராக ஆகக்கூடாதா என தனியார் ஊடக நேர்காணலில் விசிக துணை பொதுச்செயலாளர் பேசியிருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தவே இதுபோன்று பேசி உள்ளார்.

பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா மீது திருமாவளவன் கடுமையாக நடவடிக்கை எடுப்பார். திருமாவளவனே இந்த கருத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார். விசிக எம்.பி ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டதில், சமூக நீதிக்கும், சமத்துவத்துக்கும் எதிரான பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விட்டுவிடக்கூடாது என பதிவிட்டு இருந்தார். ஆனால், அவரது கட்சியில் இருக்கின்ற துணைப் பொதுச் செயலாளர் இதற்கு மாறாக பேசியுள்ளார்.

துணைப் பொதுச் செயலாளர் மீது திருமாவளன் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன். இரண்டு முரண்பட்ட கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது குறைந்தபட்ச செயல்திட்டம் தேவை. இடதுசாரி கொள்கை கொண்ட திமுகவுடன் கூட்டணி வைக்கும் போது வி.சி.க.வுக்கு குறைந்தபட்ச செயல்திட்டம் தேவையில்லை என ஆ.ராசா கூறினார்.

Last Updated : Sep 23, 2024, 9:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details