நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப்பழ சீசன் துவங்கி உள்ளதாலும், சமவெளிப் பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாலும், காட்டு யானைகள் மலை மாவட்டத்தை நோக்கி படையெடுத்து வருகின்றது. குறிப்பாக, குன்னூர் பார்லியார் பகுதிகளிலும், கோத்தகிரி, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் குஞ்சப்பனை, முல்லூர், கோழிக்கரை, செம்மணரை, மாமரம் போன்ற கிராமப் பகுதிகளில் குட்டியுடன் காட்டு யானைகள் சுற்றி திரிகிறது.
மேலும் இந்த காட்டு யானைகள் தேயிலை தோட்டங்களில் உலா வருவதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். இதன் காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதனால் இப்பகுதியில் உள்ள காட்டு யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து கோத்தகிரி வனச்சரகர் செல்வராஜ் நமது நிருபரிடம் தொலைபேசியில் தெரிவிக்கையில், “தற்போது நீலகிரி மாவட்டத்தில் பலாப்பழ சீசன் துவங்கி உள்ள நிலையில், காட்டு யானைகள் ஊருக்குள் படையெடுப்பது, அதிகமாகி வருகிறது. எனவே வனத்துறை சார்பில் யானைகளை கண்காணிக்க தனிக்குழு அமைத்து, இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.