கோயம்புத்தூர்: பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளராக, உடுமலைப்பேட்டை அருகே உள்ள மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இவருக்கு வரவேற்பு கிடைக்குமா? என்பதைப் பார்க்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வெளியிட்டதையடுத்து, திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்குமான வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்.20) அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். அந்த வகையில் திமுக சார்பில் பொள்ளாச்சி தொகுதி வேட்பாளராக, உடுமலைப்பேட்டை அருகே உள்ள மைவாடி ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு பொள்ளாச்சி தொகுதியில் சண்முக சுந்தரம் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சண்முக சுந்தரம் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட செல்போன் உதிரிபாக நிறுவனத்தை ஒப்பந்த அடிப்படையில் நடத்தி வந்தார்.