உயர்த்தப்பட்ட கட்டணம்? மானியத் தொகை இல்லாமல் ஒரு யூனிட் மின்சாரம் எவ்வளவு? - Electricity Charge Without Subsidy
Electricity Charge Without Subsidy: தமிழ்நாட்டில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அரசின் மானியம் அளிக்கப்பட்ட தொகையை தவிர்த்து, 400 யூனிட் வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 4 ரூபாய் 80 பைசா என நிர்ணயம் செய்துள்ளது.
மின்மீட்டர் - கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
சென்னை: தமிழ்நாட்டில் குடியிருப்புகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது. மேலும், இந்த உத்தரவு ஜூலை 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தில் அரசின் மானியம் அளிக்கப்பட்ட தொகையை தவிர்த்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு ஒரு யூனிட் மின்சாரத்திற்கு கட்டண விபரத்தை வெளியிட்டுள்ளது.
ஒரு யூனிட் மின்சார கட்டணம் (Credits - TANGEDCO)
முதல் 500 யூனிட் வரையில் கட்டணம்:400 யூனிட் வரையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 4 ரூபாய் 80 பைசா என நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்,
1 யூனிட்
கட்டணம் (மானியத்தொகை இல்லாமல்)
0 - 100
கட்டணம் செலுத்தத் தேவையில்லை
101 - 200
ரூ.2.35
201 - 400
ரூ.4.70
401 - 500
ரூ.6.30
500 யூனிட்க்கு மேல் பயன்படுத்துவோருக்கு கட்டணம்:
1 யூனிட்
கட்டணம் (மானியத்தொகை இல்லாமல்)
101 - 400
ரூ.4.70
401 - 500
ரூ.6.30
501 - 600
ரூ.8.40
601 - 800
ரூ.9.45
801 - 1000
ரூ.10.50
1000 யூனிட்க்கு மேல்
ரூ.11.55
விசைத்தறி நுகர்வோர்களுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் 1,000 யூனிட் வரை 8 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 1,000 யூனிட் வரையில் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
1,001 முதல் 1,500 யூனிட் வரை யூனிட் ஒன்றிற்கு 4 ரூபாய் 45 பைசா, 1,501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றிற்கு 5 ரூபாய் 65 காசுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டணப் பிரிவு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.