சென்னை: பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) ஆம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய நிலையில், 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை (Union Budget) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) சனிக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், மின்சார வாகனங்கள் மற்றும் மொபைல் பேட்டரிகளுக்கு சலுகைகள் மற்றும் லித்தியம் பேட்டரிகளுக்கு சுங்க வரி முற்றிலுமாக ரத்து உள்ளிட்ட முக்கிய அறிவிப்புக்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் வாகனத்தில் பயன்படுத்தப்படும் லித்தியம், அயோடின் பேட்டரி மூலப்பொருட்கள் இறக்குமதி செய்வதற்கான வரியை குறைத்துள்ளதால், எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் குறையும் என நெட்கான் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நெட்கான் டெக்னாலஜி (Netcon Technologies) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மகாலிங்கம் கூறுகையில், “மத்திய அரசின் பட்ஜெட்டில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் ஏஐ (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வியை எவ்வாறு மேம்படுத்தப்படும் என ஆராய்ச்சி செய்ய முடியும்.
மேலும், இது டீப் டெக் அல்லது டீப் டெக்னாலஜி (Deep Technology) தொழில் தொடங்க உதவியாக இருக்கும். எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, எலெக்ட்ரிக்கல் வாகனம் (Electrical vehicle) மற்றும் கிளீன் டெக்னாலஜிக்கு (clean technology) முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக் மூலப் பொருள்களுக்கு வரி விலக்கு கொடுத்துள்ளனர். இது தொழில் வளர்ச்சிக்கு பயன்படும்.
இதையும் படிங்க:பட்ஜெட் 2025: விலை குறையும் மின்சார வாகனங்கள் - பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்!