சென்னை:போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கைப்பேசி செயலி மூலம் போதைப்பொருள்களை விற்பனை செய்ததாகக் கல்லூரி மாணவர்கள் 5 பேரை ஜெ.ஜெ.நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், போதைப்பொருள் கடத்தலில் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக்குக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து, ஜெ.ஜெ.நகர் காவல்துறையினர் துக்ளக்கை டிச.4 ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத் தொடர்ந்து, துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.