சென்னை:கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி, மூன்று ஆண்டுகளாக சுமார் 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள்களை கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக்கை வலைவீசித் தேடிவந்தனர்.
மேலும், ஜாபர் சாதிக் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் 'லுக் அவுட் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 15 நாட்கள் ஜாபர் சாதிக்கைத் தீவரமாக தேடிவந்த நிலையில், கடந்த 9ஆம் தேதி (சனிக்கிழமை) ராஜஸ்தானில் மாநிலம் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம் மற்றும் மைதீன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இதையும் படிங்க:"ஜாபர் சாதிக்குடன் மு.க.ஸ்டாலினின் குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது" - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!