வேலூர் : வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ராஜாகுப்பம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியராக கோபிநாத் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருக்கு 2024ம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த செப் 5ம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற விழாவில், குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் தேசிய நல்லாசிரியர் விருதினை கோபிநாத் பெற்றார்.
பின்னர், தனது சொந்த ஊரான குடியாத்தத்திற்கு இன்று வருகை தந்த கோபிநாத்திற்கு, உறவினர்கள் சக ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய கோபிநாத், "தேசிய நல்லாசிரியர் விருது அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனிவரும் காலங்களில், மாணவர்கள் இன்னும் எளிமையாக கல்வி கற்க ஆர்வம் ஏற்படும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். நல்லாசிரியர் விருது பெற்றவர்களோடு பிரதமர் நரேந்திர மோடி பேசும்பொழுது இந்த விருது பெற்றதோடு நின்று விடாமல் தொடர்ந்து பல்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அவர் சொன்னது போலவே, அதிக சமூகப் பணிகளையும், கல்விப் பணிகளையும் தொடர்ந்து செய்வேன்.