தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இளைஞருக்கு அரிவாள் வெட்டு! - தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடும் போலீஸ் - MYSTERIOUS PERSON ATTACK ON YOUTH

சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பொதிகை ரயிலுக்காக காத்திருந்த இளைஞரை அரிவாளால் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த இளைஞரை போலீசார் மீட்டு, சம்பவ குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்ட காவல்துறை
பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்ட காவல்துறை (Credits - ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 9, 2024, 11:08 PM IST

தென்காசி :தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் கலைஞர் காலனி தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் செல்வராஜ் (23). இவர் சென்னையில் தனியார் கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் இன்றிரவு சென்னை செல்வதற்காக பொதிகை ரயிலை எதிர்பார்த்து சங்கரன்கோவில் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது செல்வராஜை நோட்டமிட்டு பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், செல்வராஜை அரிவாளால் சராமரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இது குறித்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க :காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. நெருங்கிய உறவுக்கார இளைஞர் வெறிச்செயல்!

இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் செல்வராஜை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் செல்வராஜை யார் வெட்டினார்கள்? கொலை முயற்சிக்கான காரணம் என்ன? என்பது குறித்து சார்பு துணை ஆய்வாளர் (RPF) வெள்ளத்துரை மற்றும் ரயில்வே போலீஸ் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் சமாதானம் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details