தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தீபாவளி பண்டிகை; "கூடுதல் பேருந்துகளால் பயணிகள் சிரமமின்றி பயணம்" - மாநகர போக்குவரத்துக் கழகம்!

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்பட்ட கூடுதல் பேருந்துகளால் பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டதாக சென்ன மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாநகர பேருந்து மற்றும் செய்திக்குறிப்பு
மாநகர பேருந்து மற்றும் செய்திக்குறிப்பு (Credits - ETV Bharat Tamil Nadu, MTC Insta page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2024, 11:02 PM IST

சென்னை : சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி பண்டிகையை கொண்டாட கிளாம்பாக்கம் (KCBT), கோயம்பேடு மற்றும் மாதவரம் (MMBT) பேருந்து நிலையங்களிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 320 இணைப்பு பேருந்துகள் மா.போ.கழகத்தால் இயக்கப்பட்டது.

அதேபோல், சொந்த ஊரில் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக நவ 3 பிற்பகல் முதல் நவ 5 முடிய கிளாம்பாக்கம் (KCBT) பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக தினசரி இயக்கப்படும் 478 பேருந்துகளின் 3,529 பயண நடைகளுடன் நவ 3 பிற்பகல் முதல் நவ 4 வரை கூடுதலாக 350 பேருந்துகளின் மூலம் 1,100 பயண நடைகளும், நவ 5 காலையில் 200 பேருந்துகள் மூலம் 300 பயண நடைகளும் கிளாம்பாக்கம் (KCBT) பேருந்து நிலையத்திலிருந்தும், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது.

இதையும் படிங்க :தீபாவளி: சென்னையிலிருந்து 3.41 லட்சம் பேர் இதுவரை பயணம்.. போக்குவரத்து அமைச்சர் தகவல்!

கூடுதலாக தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, MMBT, எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இடங்களுக்கும் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனால் வழக்கமாக செல்லும் பயணிகளுடன் கூடுதலாக 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளியூர்களிலிருந்து சென்னை திரும்பிய பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர்.

சகோதர போக்குவரத்துக் கழகங்கள் திருச்சி, கும்பகோணம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு தேவையான கூடுதல் பேருந்து வசதியினை ஏற்படுத்தியதால் மாநகர் போக்குவரத்துக் கழகம் சென்னை மாநகரில் அனைத்து பேருந்து நிலையங்களுக்கும் இணைப்பு பேருந்துகளை கூடுதலாக இயக்கி பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொண்டனர் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பல்வேறு ஊர்களுக்கு செல்ல மொத்தமாக 12 ஆயிரத்து 606 பேருந்துகள் இயக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details