சென்னை:இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ் கனி வக்ஃபு வாரிய புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் சிறுபான்மை நலத்துறை மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்திதார். இது குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை பேரில் தமிழ்நாடு வக்ஃபு வாரியத்திற்கு புதிய தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்களும் ஏக மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், வக்ஃபு வாரிய தலைவருமான நவாஸ் கனி கூறுகையில், “வக்ஃபு வாரிய அலுவலகத்தில் இன்று வக்ஃபு வாரிய சிறப்பு கூட்டம் நடைபெற்றது . சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முன்னிலையில் வக்ஃபு வாரிய தலைவராக என்னை தேர்ந்தெடுத்தார்கள். முக்கிய கால கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.