தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் - எம்.பி கார்த்தி சிதம்பரம் காட்டம்! - MP Karti Chidambaram

MP Karthi Chidambaram: இந்தியாவின் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசு, அமைச்சரவை தயார் செய்து கொடுத்த உரையைத் தான் படிக்க வேண்டும். தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைச் சட்ட சபையில் காட்டக்கூடாது என எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

எம்.பி கார்த்தி சிதம்பரம்
எம்.பி கார்த்தி சிதம்பரம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 9:53 PM IST

எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கை: சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM - Electronic Voting Machine) மீது எனக்கு நம்பிக்கை உண்டு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் (VVPAT - Voter Verifiable Paper Audit Trail) வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை பாதை அமைத்து ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு நடவடிக்கை எடுத்தால் பலரது சந்தேகங்கள் தீரும்.

தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும். ஆனால் அதனை ஒடுக்குவது என்ற சர்வாதிகாரப் போக்கை பாஜக கடைப்பிடிக்கிறது. செந்தில் பாலாஜியின் ராஜினாமா என்பது குற்றவாளி என நிரூபிக்கப்படும் முன்பே அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே பார்க்கிறேன்.

தமிழக ஆளுநர் பதவியிலேயே இருக்கக்கூடாது. இந்தியாவின் குடியரசுத் தலைவர், ஆளுநர் ஆர்.என் ரவியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசு, அமைச்சரவை தயார் செய்து கொடுத்த உரையைத் தான் படிக்க வேண்டும். தனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைச் சட்ட சபையில் காட்டக்கூடாது. மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதனை நாங்கள் பிரதிபலிக்கிறோம். திமுக தலைமையிலான கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் இடங்கள் குறித்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். அரசு ஊழியர்களின் பென்சன் கோரிக்கையைத் தமிழக அரசு நிதி நிலைமைக்கு ஏற்ப தான் அமல்படுத்த முடியும்” என்றார்.

இதையும் படிங்க:ஆளுநர் சட்டப்பேரவை வீடியோ வெளியிட்ட விவகாரம்; காங்கிரஸ் தரப்பில் அவை உரிமை மீறல் தீர்மானம்!

ABOUT THE AUTHOR

...view details