தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமர் கோயில் பற்றி கேள்வி எழுப்பினால் மத்திய அரசு ’ஐஸ்’ வைக்கும் - கனிமொழி எம்பி!

MP Kanimozhi speaks about ayodhya ram temple: தனியார் அறக்கட்டளை கட்டியுள்ள ராமர் கோயிலை திறப்பதற்கு, அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் விடப்படுகிறது. இது குறித்து கேள்வி கேட்டால் வருவாய்த்துறை, அமலாக்கத்துறை என ஐஸ் வைத்து மத்திய அரசு ரெய்டு அனுப்புவார்கள் என கனிமொழி எம்பி பேசியுள்ளார்.

ராமர் கோயில் பற்றி கேள்வி எழுப்பினால் மத்திய அரசு ’ஐஸ்’ வைக்கும்
ராமர் கோயில் பற்றி கேள்வி எழுப்பினால் மத்திய அரசு ’ஐஸ்’ வைக்கும்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 22, 2024, 1:35 PM IST

ராமர் கோயில் பற்றி கேள்வி எழுப்பினால் மத்திய அரசு ’ஐஸ்’ வைக்கும்

சேலம்: சேலத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் பேசிய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, “கருணாநிதிக்குப் பின் ஆட்சி பொறுப்பேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், எனக்கு கருணாநிதி போல் பேச தெரியாது, எழுத தெரியாது, ஆனால் கருணாநிதி போல் உழைக்கத் தெரியும் என்றார். அந்த வழியில் இளைஞரணியை இன்று உதயநிதி வழிநடத்தி வருகிறார்.

உதயநிதி ஒரு தர்மத்தைப் பற்றி பேசினார். எதிர்ப்பு வந்தாலும் மண்டியிட மாட்டேன், நான் பெரியார் பேரன், கருணாநிதி பேரன், முதலமைச்சரின் மகன் என்ற வகையில் மண்டியிடாத மனப்பக்குவம் ஒன்று போதும். அதேபோல், மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டியதில் உடன்பாடில்லை என சொல்லுவதற்கு தைரியம் இருக்கிறது.

எனவே அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் வழியில் இந்நாட்டை ஆளுவதற்கு வேறென்ன தகுதி வேண்டும் என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன். இது தமிழ்நாட்டிற்கான மாநாடு அல்ல. இந்தியாவிற்கான மாநாடு. பாஜக கட்சிக்குள் யுத்தம் ஆரம்பித்துவிட்டது. மாராட்டிய சிவாஜியை விட, மோடி பெரிய வீரன் அல்ல. சிவாஜியை விட அமித்ஷா பெரிய வீரன் அல்ல. மோடி, அமித்ஷா ஆகியோர் இந்துக்கள் என்ற பெயரால் எங்களை ஏமாற்ற வேண்டாம்” என்றார்.

பின்னர் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ”நம்முடைய இளைஞர் அணியின் முதல் மாநாடு, நெல்லையில் நடைபெற்றது. இங்கே 2வது மாநாட்டில், சேலத்தில் திமுக இளைஞர் பட்டாளத்தை பார்க்கும்போது, சேலத்தில் சுனாமி வந்தது போல் உள்ளது. இந்த மாநாட்டின் வெற்றிக்காக உதயநிதி தொடர்ந்து உழைத்துள்ளார். ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று, அங்குள்ள இளைஞர்களை வேலை வாங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டுள்ளார்.

நிச்சயமாக தலைவர் ஸ்டாலின், தன் மகனை சான்றோர் என கேட்ட தாய் போல மகிழ்ச்சியோடு மேடையில் அமர்ந்திருப்பார். நம்முடைய இயக்கத்தின் கொடியை ஏற்ற வாய்ப்பு தந்த முதல்வர் மற்றும் உதயநிதிக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் பெரியார் பிள்ளைகள் என கூறுகிறோம். நாளை வட இந்தியாவில் ஒரு கோயிலை திறக்கவுள்ளார்கள். அந்த கோயிலைத் திறப்பதற்கு குடியரசுத் தலைவருக்கு கூட அழைப்பு விடுக்கப்படவில்லை. ராமர் கோயிலைத் திறப்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.

ஆனால், ஒரு கோயிலைக் கட்டி முடிப்பதற்குள் திறக்கலாமா என அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பினார். பின்னர் தொடர்ந்து பேசிய கனிமொழி, பாஜக நாங்கள்தான் இந்து மதத்தை காப்பாற்றுகிறோம், சனாதனத்தைக் காப்பாற்றுகிறோம் என கூறுகிறார்கள். ஆனால், பாஜக அரசு இந்துக்களின் உணர்வுகளை மதிக்காமல் அரசியல் லாபத்திற்காக கட்டி முடிக்காத கோயிலை திறக்கவுள்ளனர்.

தனியார் அறக்கட்டளை கட்டியுள்ள கோயிலைத் திறப்பதற்கு அரசு சார்பில் சிறப்பு ரயில்கள் விடப்படுகிறது. இது குறித்து கேள்வி கேட்டால் வருவாய்த்துறை, அமலாக்கத்துறை என ஐஸ் வைத்து ரெய்டு அனுப்புவார்கள். ஆனால், அதற்கெல்லாம் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் அஞ்சமாட்டார்கள், நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் கருத்துக்களை எதிர்ப்போம். உங்கள் ஆட்சியை வீழ்த்துவோம் என்பதில் சந்தேகமில்லை. ஆகையால் இந்திய அளவில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். கண்டிப்பாக மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்” என கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நித்தியானந்தா..? வர வாய்ப்புள்ளதா..?

ABOUT THE AUTHOR

...view details