விழுப்புரம்:முன்னாள் அதிமுக அமைச்சரும் தற்போதைய எம்பியுமான சி.வி சண்முகம் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு பல்வேறு கொலை மிரட்டல்கள் வருகிறது.
வாட்ஸ் அப், குறுஞ்செய்தி மற்றும் தொலைபேசி மூலமாக எனக்கு தொடர் கொலை மிரட்டல்கள் வருகிறது. அத்தகைய அழைப்புகளில் பேசும் நபர்கள் அவதூறு வார்த்தைகளாலும், ஆபாச வார்த்தைகளாலும் என்னை புண்படுத்துகிறார்கள். இது குறித்து இதுவரை காவல்துறையிடம் 21 முறை புகார் அளித்துள்ளேன். மேலும் நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் திண்டிவனம் காவல் நிலையத்திலும் பலமுறை புகார் அளித்துள்ளேன்.
எம்பி சி.வி சண்முகம் பேட்டி (Credits- ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:போக்குவரத்து துறை வேலை மோசடி வழக்கு; அமைச்சர் செந்தில் பாலாஜி கோர்ட்டில் ஆஜர்!
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து காவல் துறையினர் இந்த புகார் மீது அலட்சியம் காட்டி வருகின்றனர். இன்று வரை இது குறித்து வழக்கு பதிவு செய்ய கூட இல்லை. இது குறித்து இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை சந்திக்க நேரில் வந்தேன் ஆனால் அவர் நான் வரும் தகவல் அறிந்து வெளியில் சென்று விட்டதாக தெரிகிறது. நான் நீண்ட நேரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை காண அவர் அலுவலகத்தில் காத்திருந்தேன். ஆனால் அவர் வரவில்லை. இந்த அராஜக போக்கை கண்டிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து எம்பி சி.வி சண்முகம் அனுமதியின்றி நீண்ட நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அதிமுக தொண்டர்களும் சாலை மறியலில் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்