நீலகிரி:நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை காரணமாக, குன்னூர், உதகை, கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடுமையான மேகமூட்டம் நிலவி வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெண்மையான மேகம் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், மேக மூட்டத்தில் பனித் துளிகள் சாரலாக பெய்து வருகிறது.
குறிப்பாக, குன்னூரில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கும் டால்பின் நோஸ், லேம்ஸ்ராக் சிம்ஸ் பார்க், காட்டேரி பூங்கா போன்ற பகுதிகளில் மேகமூட்டம் சூழ்ந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சியைக் கண்டு ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் உள்ளூர்வாசிகள் பகல் நேரங்களிலேயே தீ மூட்டி தங்களது உடலை சூடேற்றிக் கொள்கின்றனர்.