தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல நகைக்கடை கதவு தானாக மூடியதால் உள்ளே சிக்கித் தவித்த வாடிக்கையாளர்கள்.. தூத்துக்குடியில் நள்ளிரவு பரபரப்பு! - jewellery shop door closed issue

தூத்துக்குடி நகரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையின் ஷெட்டர் கதவு கட்டாகி தானாக மூடியதால், உள்ளே மாட்டிக்கொண்ட வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் என மொத்தம் 25 பேரை தீயணைப்புத் துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.

மீட்புப் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள்
மீட்புப் பணியில் தீயணைப்புப் படை வீரர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 18, 2024, 6:06 PM IST

தூத்துக்குடி :தூத்துக்குடி மாவட்டம், தமிழ்ச்சாலை ரோட்டில் பிரபல நகைக் கடை உள்ளது. இக்கடையில் முன்பக்கம் புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு 10 மணி அளவில் கடை ஷெட்டரின் ஹைட்ராலிக் க்ளோசர் கட்டாகி, கடையின் முன்பக்க வாசல் மூடிக்கொண்டது. கடையின் உள்ளே வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் என மொத்தம் 25 பேர் இருந்தனர்.

இதுகுறித்த தகவல் மத்திய பாகம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர்
நகைக் கடையின் ராட்சத ஷெட்டரை ஏர் பலூன்கள் மூலம் சிறிதளவு தூக்கி கடைக்குள் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க :AI தொழில்நுட்ப காலத்திலும் இந்த கொடுமையா? துப்புரவு பணியாளருக்கு கோயம்பேட்டில் நேர்ந்த அவலம் - Sanitary workers Clean drainage

ABOUT THE AUTHOR

...view details