சென்னை:தமிழ்நாடு முழுவதும் இன்று மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்களிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ஜனநாயகக் கடமை என நடிகர் ஆனந்த் ராஜ் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தை பொருத்த வரை வாக்கிற்கு பணம் கொடுக்கப்படுகிறதே என நிருபர் கேள்வி எழுப்பிய நிலையில், அன்று முதல் இன்று வரை தமிழகத்தில் இது மாறவில்லை எனவும் பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், பணம் வாங்காமல், ஒருவருக்கும் வளைந்து கொடுக்காமலும் இருப்பதால்தான் தன்னால் நெஞ்சை நிமிர்திக்கொண்டு பேச முடிகிறது என தெரிவித்த ஆனந்த் ராஜ் தெரிவித்தார். வாக்கிற்கு பணம் வாங்காமல் வாக்களித்து, கேள்வி கேட்க மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.