தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர்! "விக்சித் பாரத்" தான் இலக்கு, பிரதமர் மோடி பேட்டி! - PM MODI ON UNION BUDGET

2047ஆம் ஆண்டுக்குள் 'விக்சித் பாரத்' இலக்கை அடைவதில் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் புதிய நம்பிக்கையையும், சக்தியையும் ஊட்டும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 31, 2025, 1:13 PM IST

புதுடெல்லி:2025-26ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், வெள்ளிக்கிழமை இன்று (ஜன.31) தொடங்கியது. இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் என்பதால், நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார்.

இதற்கு முன்னதாக நாடாளுமன்றம் வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேசிய அவர், “2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படாத முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இதுதான். ஒவ்வொரு கூட்டத் தொடருக்கும் முன்னதாக, நமது எதிரிகள் குழப்பத்தை ஏற்படுத்தத் தயாராக இருப்பார்கள். இதை நான் 2014ஆம் ஆண்டு முதல் கவனித்து வருகிறேன்.

நாளை பிப்ரவரி 1 சனிக்கிழமை எனது மூன்றாவது பதவிக் காலத்தில் முதல் முழு அளவிலான பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளோம். இந்த ஆண்டு ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை உயர்த்தும் வகையில் பட்ஜெட் அமையும். அதற்காக நான் செல்வத்தின் அரசியான லட்சுமி தேவியைப் பிரார்த்தனை செய்கிறேன்.

இதையும் படிங்க:நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: குடியரசு தலைவர் உரையுடன் இன்று துவக்கம்!

இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 2047ஆம் ஆண்டுக்குள் 'விக்சித் பாரத்' இலக்கை அடைவதில் புதிய நம்பிக்கையையும், சக்தியையும் ஊட்டும் என்று நம்புகிறேன். பெண்களுக்குச் சம உரிமை, மதவெறி அல்லது நம்பிக்கை அடிப்படையிலான பாகுபாடுகளை களைவது குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும். இந்த அமர்வின் போது ஒவ்வொரு எம்.பி.யும், குறிப்பாக இளைஞர்கள், 'விக்சித் பாரத்' நிகழ்ச்சி நிரலுக்குப் பங்களிப்பார்கள்” என்றார்.

"விக்சித் பாரத்" என்பது, இந்தியா சுதந்திரம் அடைந்த 100-வது ஆண்டான 2047-க்குள் நாட்டை வளர்ச்சி அடைந்ததாக மாற்றும் மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வையாகும்.

ABOUT THE AUTHOR

...view details