சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சியுடன் பேச்சுவார்ததை நடத்த திமுக அழைப்பு விடுத்துள்ளது.
இதன்படி, நாளை (மார்ச் 2) காலை 9.30 மணிக்கு, மனிதநேய மக்கள் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைமை அலுவலகத்தில், திமுக தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தலைவர், பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் MLA தலைமையில், பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, பேராசிரியர் ஹாஜாகனி உள்ளிட்ட நிர்வாகிகள் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக, திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடையேயான பேச்சுவார்த்தையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் தற்போது வரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்ட தொகுதிகளை திமுக தலைமை ஒதுக்க மறுப்பதால், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்குச் செல்லாமல், விசிக அடுத்தடுத்த பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:அதிமுக - தேமுதிக கூட்டணி முதற்கட்ட பேச்சுவார்த்தை - எஸ்.பி.வேலுமணி முக்கிய தகவல்!