தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் ரெடி! உச்சக்கட்ட பயத்தில் மோடி' - மு.க.ஸ்டாலின் - MK Stalin - MK STALIN

MK Stalin vs PM Modi: ஒட்டுமொத்த ரவுடிகளையும் பாஜகவில் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு பற்றி பிரதமர் மோடி பேசுவதாகவும், பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் ரெடியாக உள்ளதாகவும், தேர்தல் பத்திர விவகாரம் வெளியானதால் மோடிக்கு தான் தூக்கமில்லை எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 31, 2024, 10:41 AM IST

சேலம்:சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவைச் சேர்ந்த சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மலையரசன் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், 'சேலம் வந்த பிரதமர் மோடி பாஜகவுக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்த்து திமுகவுக்கு தூக்கம் தொலைந்து விட்டது என்றார். உண்மையாக உங்களால் தூக்கத்தை தொலைத்தது சாமானிய மக்கள், பெண்கள், இளைஞர்கள் சிறுகுறு தொழிற்சாலையினர், விவசாயிகள், சிறுபான்மையினர் என ஒட்டுமொத்த நாடும் தூக்கத்தை தொலைத்து நிம்மதி இன்றி தவிக்கின்றனர்.

உச்சநீதிமன்றத்தால் வெளிவந்த தேர்தல் பத்திர ஊழலால் (electoral bonds issue), மோடியின் தூக்கம் கலைந்து விட்டது. தமிழகத்தை புண்ணிய பூமியாக இருக்கு என்றீர்கள். தமிழகத்தில் சாதி, மத சண்டைகள் இல்லாமல் புண்ணிய பூமியாகத்தான் இருக்கிறது.

பாஜக-பாமக சந்தர்ப்பவாத கூட்டணி: அமைதியாக உள்ள இங்கு சாதி, மத பெயரால் பிரிவினை ஏற்படுத்த பாஜக சதி செய்கிறது. இத்தேர்தல் மட்டுமல்ல; இன்னும் நூறு தேர்தல் வந்தாலும், பாஜகவால் தமிழகத்தில் வெற்றி பெற முடியாது. திமுக உள்ளவரை தமிழகத்தில் மோடி மஸ்தான் வேலை பலிக்காது. ராமதாஸ் பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்து சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வைப்போம் என்கிறார்.

கடந்த மூன்று தேர்தல்களில் என்டிஏ கூட்டணியில் இருந்த பாமக ஏன் இந்த அழுத்தத்தை கொடுக்கவில்லை? பாஜக, பாமக ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்பதால் கட்சியினரே தலைகுனிந்து நிற்கின்றனர். குடும்ப அரசியல் என மீண்டும் மீண்டும் கூறுகிறார், மோடி.

மணிப்பூர் கலவரத்தின் போது என்ன செய்தீர்கள்?: நாங்கள் அரசியலுக்கு வருவது ஊர் சுற்றுவதற்கு அல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்கிறார், மோடி. இதற்கு என்ன தரவு வைத்துள்ளீர்கள். பாஜக ஆளும் மணிப்பூர் பற்றி எரிந்தபோது எங்கே போனீர்கள். அந்த மாநில முதலமைச்சரை பதவியில் இருந்து விலகவாவது சொன்னீர்களா? பாஜக ஆளும் மாநிலங்களில் தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல்:தமிழக மக்கள் அனைவரும் அமைதியாக வாழ்வது உங்களுக்கு பிடிக்கவில்லையா? பாஜகவில் உள்ள ரவுடிகளின் பட்டியல் என்னிடம் உள்ளது. எதையும் ஆதாரமில்லாமல் பேசமாட்டேன். போலீஸ் ஸ்டேஷனில் உள்ள 32 பக்க பட்டியலில் உள்ளவர்கள் பாஜகவில் உள்ளனர். 1977 வழக்குகளில், 261 ரவுடிகள் பாஜகவில் உள்ளனர். எல்லா ரவுடிகளையும் பாஜகவில் வைத்துக் கொண்டு சட்டம் ஒழுங்கு பற்றி பேசுகிறார், பிரதமர் மோடி.

போதைப்பொருள் விவகாரத்தில் குஜராத் முதலிடம்:வேண்டுமென்றால், உங்களிடம் உள்ள உளவுத்துறையை வைத்து கிராஸ் செக் (Cross Check) செய்து கொள்ளுங்கள். என் மீது வழக்கு தொடர்ந்தாலும், நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளேன். போதைப்பொருட்கள் வழக்கில் தொடர்புடையவர் எனத் தெரிந்தவுடன் அவரை கட்சியை விட்டு நீக்கினேன். இந்த வழக்கை வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பேசுவது பிரதமர் பதவிக்கு அழகு அல்ல. குஜராத் மாநிலத்தில் இருந்து தான் அதிகம் போதைப்பொருட்கள் வருகின்றன.

எடப்பாடி பழனிசாமிக்கு பயம்:அதிகம் புழக்கம் உள்ள, முதல் 10 மாநிலங்களில் பாஜக ஆளும் மாநிலங்கள் 7 உள்ளன. அதில், தமிழகம் கிடையாது. அதிமுக ஆட்சியில்தான் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, தலைமை செயலகத்தில் சோதனை, அமைச்சர் மற்றும் டிஜிபி வீடுகளுக்கு ரெய்டு, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை நடந்தன. தேர்தல் நேரத்தில் ஈடி, சிபிஐ, ஐடி ரெய்டுகளை பயன்படுத்துவதால் உச்சகட்ட அச்சத்தில் இருக்கிறார், எடப்பாடி கே.பழனிசாமி.

ஒட்டுமொத்த மக்களும் பாஜகவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக இருக்கின்றனர். சாதனையாக மாறக்கூடிய வாக்குறுதிகளையே இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக வழங்கி உள்ளது எனப் பேசியுள்ளார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அமைச்சர் எ.வ.வேலு, சேலம் எம்பி பார்த்திபன், வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ எனப் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க:'திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் குற்ற சம்பவங்கள்..இந்நிலை மாற அதிமுகவிற்கு வாக்களியுங்கள்' - பிரேமலதா விஜயகாந்த் - Peramalatha Vijayakanth

ABOUT THE AUTHOR

...view details