தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கருணாநிதி 6வது ஆண்டு நினைவு நாள்: முதலமைச்சர் தலைமையில் பேரணி.. மெரினா நினைவிடத்தில் மரியாதை! - karunanidhi death anniversary

karunanidhi death anniversary: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி, சி.என்.அண்ணாதுரை நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணி புகைப்படம்
முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைதிப் பேரணி புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 9:45 AM IST

Updated : Aug 7, 2024, 11:01 AM IST

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்திலிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது, "வீர வணக்கம்.. வீர வணக்கம். முத்தமிழறிஞருக்கு வீர வணக்கம்... வீர வணக்கம் வீர வணக்கம் பேரறிஞர் அண்ணாவுக்கு வீர வணக்கம்" என திமுகவினர் முழக்கமிட்டனர்.

கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் (Credit - Udhaystalin X page)

இந்த அமைதிப் பேரணியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்டோரும், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: ஐந்தாவது மாநில திட்டக் குழு கூட்டம்; முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரைகள் என்னென்ன?

Last Updated : Aug 7, 2024, 11:01 AM IST

ABOUT THE AUTHOR

...view details