ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இந்தியாவிலேயே முதன்முறையாக'.. விளையாட்டுத் துறையின் கீழ் வெளியான புதிய அறிவிப்புகள்! - udhayanidhi stalin - UDHAYANIDHI STALIN

Sports Development new announcements: இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர் அருகில் SDAT பிரத்யேக ஒலிம்பிக் ஓடுபாதை ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (credit - Etv Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 7:21 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

புதிய அறிவிப்புகள்:

1. சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ் நாட்டின் சார்பாக பங்கேற்று வெற்றி பெற்ற 100 வீரர், வீராங்கனைகளுக்கு 3 சதவிகித விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் பணி ஆணை வழங்கப்படும்.

2. டாக்டர். கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் (மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி) ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

3. திருவெறும்பூர், மன்னார்குடி, உத்திரமேரூர், உசிலம்பட்டி, மேட்டூர், கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், தாராபுரம், பென்னாகரம், கீழ்வேளூர், சேந்தமங்கலம், தாம்பரம், குறிஞ்சிப்பாடி, சேலம்-ஆத்தூர், கும்பகோணம், மேலூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்-ஆத்தூர், குளச்சல், மொடக்குறிச்சி, பண்ருட்டி மற்றும் இராமநாதபுரம் ஆகிய 22 சட்டமன்றத் தொகுதிகளில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கங்கள் ரூபாய் 66 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

4. இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர் அருகில் SDAT பிரத்யேக ஒலிம்பிக் 'Bicycle Motocross' (BMX) ஓடுபாதை ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

5. SDAT நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் விளையாட்டு அரங்கங்கள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

6. கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழர் பாரம்பரிய தற்காப்புக் கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் புதியதாக அமைக்கப்படும்.

7. மதுரை மாவட்டத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் Diving Pool-உடன் கூடிய ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் மற்றும் கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும்.

8. அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களில் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

9. அரியலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் செயற்கை இழை Hockey ஆடுகளம் அமைக்கப்படும்.

10. SDAT-யின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் பயிற்சி பெறும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை 2330- லிருந்து 2600-ஆக உயர்த்தப்படும்.

i உணவுப்படி நாள் ஒன்றுக்கு ரூபாய் 250-லிருந்து ரூபாய் 350-ஆகவும்,

ii. சீருடை மானியத் தொகை ரூபாய் 4,000-லிருந்து ரூபாய் 6,000- ஆகவும்,

iii. உபகரண மானியத் தொகை ரூபாய் 1,000-லிருந்து ரூபாய் 2,000- ஆகவும் உயர்த்தப்படும்.

11. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை அறிவியல் பூர்வமாக மதிப்பீடு செய்திட 'Athlete Management System (AMS) Software' செயல்படுத்தப்படும்.

12. அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்கள் மற்றும் '37 SDAT' விளையாட்டு விடுதிகளுக்கு நவீன விளையாட்டு உபகரணங்கள் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படும்.

13. மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் செயற்கை இழை 'Hockey' ஆடுகளத்துடன் கூடிய முதன்மை நிலை பயிற்சி மையம் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்படும்.

14. SDAT - ஆல் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்களுக்கான மானியம் ஒலிம்பிக் விளையாட்டிற்கு ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாகவும், ஒலிம்பிக் அல்லாத விளையாட்டிற்கு ரூபாய் 15 லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சமாகவும் உயர்த்தப்படும்.

15. புதிய இளைஞர் கொள்கை அறிமுகம் செய்யப்படும்.

16. அனைத்து மாவட்டங்களிலும் "விளையாட்டு திறன் மேம்பாடு மற்றும் அங்கீகார மையம்"- STAR அகாடமி உருவாக்கப்படும்.

17. SDAT கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து உள் மற்றும் வெளி விளையாட்டரங்கங்களின் கட்டமைப்பு வசதிகள், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்திடும் வகையில் மாற்றி அமைக்கப்படும்.

18. தேசிய மாணவர் படை மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை 14 லட்சத்திலிருந்து ரூபாய் 28 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் மற்றும் 30 எண்ணிக்கையிலான நவீன 'Air Rifle' ரக துப்பாக்கிகள் வாங்கிடவும் நிதி உதவி அளிக்கப்படும்.

19. 2024-ஆம் ஆண்டு முதல் நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு ரூபாய் 50 லட்சம் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

20. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் (Champions Development Scheme) & விளையாட்டு ஒன்றிற்கு நிதியுதவி ரூபாய் வீரருக்கு ஆண்டு வழங்கப்பட்டு வரும் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 4 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

21. தலைசிறந்த 10 விளையாட்டு வீரர்கள் ஒப்பந்த அடிப்படையில் 'எக்ஸ்பர்ட் கோச்சஸ்' ஆக பணியமர்த்தப்படுவர்.

22. சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நவீன வசதிகளுடன் கூடிய உயர் செயல் திறன் மாணவர் விடுதி ரூபாய் 25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும், ஆகிய அறிவிப்புகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

இதையும் படிங்க:'திமுக வன்னியர்களுக்கு செய்த துரோகத்துக்கு இடஒதுக்கீடு தான் பரிகாரம்' - அன்புமணி ராமதாஸ்

ABOUT THE AUTHOR

...view details