தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கள்ளச்சாராய மரணம்; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி - KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY - KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY

KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் அறிவித்த அரசின் நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினார்.

நிவாரணத்துக்கான காசோலையை வழங்கிய உதயநிதி
நிவாரணத்துக்கான காசோலையை வழங்கிய உதயநிதி (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 20, 2024, 7:01 PM IST

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் அருகே மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் திடீரென்று வாந்தி, வயிற்றெரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில், சிகிச்சை பெற்று வந்த 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களையம், இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திராவிட முன்னேற்ற கழக இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, சசிகலா உள்ளிட்டோர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதனிடையே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்குவதாக உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அவர்களிடம் முதலமைச்சர் அறிவித்த ரூ.10 லட்சத்திற்கான காசோலையை நிவாரண தொகையை வழங்கினார்.

இதையும் படிங்க:கள்ளச்சாராயத்தால் வீட்டுக்கொரு மரணம்! மணிக்கொரு மரணம்! கண்ணீரில் கள்ளக்குறிச்சி - KALLAKURICHI ILLEGAL LIQUOR TRAGEDY

ABOUT THE AUTHOR

...view details