கோயம்புத்தூர்: அவினாசி சாலையில் உள்ள டைடல் பார்க் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய தகவல் தொழில் நுட்ப பூங்கா மற்றும் காந்திபுரம் செம்மொழி பூங்கா வாளகத்தில் அமைக்கப்பட இருக்கும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா ஆகியவற்றில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த இடங்களை
கோவை பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்விற்கு பின்னர் தீபாவளி டாஸ்மாக் விற்பனை எவ்வளவு என செய்தியாளர்கள் எழுப்பியக் கேள்விக்கு, இன்னும் சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும் அலுவலர்கள் தீபாவளி விடுப்பில் இருந்ததால் உடனடியாகக் கூற முடியாது எனவும் தெரிவித்த அவர், அலுவலர்களிடம் பேசி தகவல் கிடைத்தவுடன் உங்களிடம் சொல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து முதலமைச்சரின் கோயம்புத்தூர் நிகழ்வுகளைக் குறித்து பேசிய அவர், “முதலமைச்சர் ஸ்டாலின், நவம்பர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கோவை மாவட்டம் வருகிறார். ஐந்தாம் தேதி பிற்பகல் 12 மணிக்கு புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.”