சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 24) பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
அப்போது சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தில், "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் தயாராகி உள்ளதா? அண்ணாமலையார் கோயிலுக்கு தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதேபோல் கோயிலின் தங்க வைப்பு நிதி மூலம் வங்கிகளில் எவ்வளவு கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது?" எனவும் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பணிகள் குறித்து மாவட்ட அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் 10 நாட்களுக்கு ஒருமுறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும், திருவண்ணாமலை கோயிலுக்காக முதற்கட்ட மாஸ்டர் பிளான் திட்டத்திற்காக ரூ.36.41 கோடியில் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், திருவண்ணாமலை கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பௌர்ணமி நாளில் 30 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் வருகை தருகின்றனர்.