சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைக்கான விவாதம் கடந்த 20ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த நான்காம் நாள் கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
தஞ்சையில் புதிதாக மாவட்ட சிறைச்சாலை - அமைச்சர் ரகுபதி அறிவிப்பு! - Tamil Nadu Assembly 2024 - TAMIL NADU ASSEMBLY 2024
Minister S Regupathy: திருச்சியில் மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனம் மற்றும் தஞ்சையில் மாவட்ட சிறைச்சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ளார்.
Published : Jun 25, 2024, 12:37 PM IST
அப்போது உயர்கல்வித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சட்டத்துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை உள்ளிட்டவைகளுக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில், சட்டத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ரகுபதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள் பின்வருமாறு:-
- திருச்சியில் மாநில சீர்திருத்த நிர்வாக பயிற்சி நிறுவனம் அமைத்தல்
- தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட சிறைச்சாலை அமைத்தல்
- புழலில் கூடுதலாக ஆயிரம் சிறைவாசிகளை அனுமதிக்கும் வகையில் கூடுதல் தளம் கட்டுதல்
- 9 மத்திய சிறைகள் மற்றும் புழல் வேலூர், திருச்சிராப்பள்ளி ஆகிய மூன்று பெண்கள் தனிச்சிறைகளில் காட்சிப் பலகையுடன் கூடிய பொது தகவல் அறிவிப்பு அமைப்பு நிறுவுதல்
- 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் தனிச் சிறைகள், 14 மாவட்ட சிறைகள், பூவிருந்தவல்லி தனி கிளைச்சிறை மற்றும் சிறைத்துறை தலைமையகம் ஆகிய இடங்களில் 160 காணொலி காட்சி அமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல்
- 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் தனிச் சிறைகளில் குழந்தை நேய நேர்காணல் அறைகளை அமைத்தல்
- 9 மத்திய சிறைகளுக்கு வெளிச்சுற்று பாதுகாப்பிற்கான சுற்று காவல் வாகனம் வழங்குதல்
- மத்திய சிறை, வேலூர், கோயம்புத்தூர், கடலூர் மற்றும் மத்திய சிறை - 2, புழல் ஆகிய சிறைகளுக்கு புதிய அவசரகால ஊர்தி வழங்குதல்
- புழல் மத்திய சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பார்வையாளர் காத்திருப்பு கூடம் கட்டுதல்
- 9 மத்திய சிறைகள் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட சிறைகளுக்கு 50 உடலோடு அணியும் புகைப்படக் கருவிகள் (Collar Camera) வழங்குதல்
- 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் தனி சிறைகள், 14 மாவட்ட சிறைகள் மற்றும் தனி கிளைச்சிறை, பூவிருந்தவல்லி ஆகிய சிறைகளுக்கு, கையடக்க உலோகம் கண்டுபிடிக்கும் கருவிகள் வழங்குதல் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இதையும் படிங்க:வானிலையை துல்லியமாக கணிக்க 88.78 கோடி மதிப்பீட்டில் பல திட்டங்கள்! இனி பேரிடர்களை எதிர்கொள்ளத் தயாராகும் தமிழகம் - TN Assembly 2024