தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 5000 கனஅடி உபரி நீர் திறப்பால் ஆபத்தில்லை”- அமைச்சர் விளக்கம்! - MA SUBRAMANIAN ON CHENNAI RAIN

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு ஆற்றில் 5000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட உள்ளது இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா சுப்பிரமணியன், செம்பரம்பாக்கம் ஏரி
அமைச்சர் மா சுப்பிரமணியன், செம்பரம்பாக்கம் ஏரி (Credits- ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2024, 4:16 PM IST

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறு ஆற்றிக்கு தற்போது 1000 கனஅடி திறக்கப்படும் நிலையில் இதுவே, 5000 கனஅடி வரையான உபரி நீர் திறக்கப்பட உள்ளது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 'உலக நீரிழிவு நோய் தினம்' விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார்.

உலக நீரிழிவு நோய் தினம் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் (Credits- ETV Bharat Tamil Nadu)

இந்த நிகழ்ச்சியில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' என கூறி 'ஸ்ரீ விக்னராஜம் பஜே' எனும் விநாயகர் வாழ்த்துப் பாடலை மாணவிகள் பாடின. அதைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து ஒலிபெருக்கியில் இசைக்கப்பட்டதால் சற்று நேரம் நிகழ்ச்சியில் பரபரப்பு நிலவியது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “நீரிழிவு நோய் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவில் 12 சதவீதம் பேர் இந்த நோய்யின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழ்நாட்டில் 13 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நானும் 30 ஆண்டுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன். தற்போது நான் உறுதியாக இருக்க நான் மேற்கொள்ளும் பயிற்சிகளே காரணம். பல ஓட்டபந்தையங்களில் பங்கு பெற்றுள்ளேன். இந்தியாவில் இருந்த 31 மாநிலங்களில் கால் தடத்தை பதித்துள்ளேன்.

நான் உடற்பயிற்சி செய்து வருவதால்தான் நீரிழிவு நோயில் இருந்து தற்பொழுது வரை என்னை பாதுகாத்து கொள்ள முடிகிறது. தமிழ்நாட்டில் இருப்பது போல 'நடப்போம் நலம்பெறுவோம்' என்ற நடைபயிற்சி கட்டமைப்பு உலகில் வேறு எங்கும் இல்லை. மொழி தெரியாத வேறு மாநிலங்களில் உள்ளவர்களும் நமது 'நடப்போம் நலம்பெறுவோம்' இணையத்தளம் மூலம் விழிப்புணர்வு பெற்று, பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் முதல் நிலை நீரிழிவு நோயால் பாதிப்படையும் 2500 குழந்தைகள் இன்சுலின் பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:திண்டுக்கல் தனியார் மருத்துவமனை தீ விபத்து சம்பவம்; முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு! - MK STALIN

செம்பரம்பாக்கம் ஏரியில் 1000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்படலாம் என சொல்கின்றனர். இந்த உபரி நீரானது அடையாற்றில் திறக்கப்படுகிறது. இதனால், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இருக்காது. பொதுமக்கள் பயப்பட தேவையில்லை. பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details