தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"அயோத்தி ராமர் கோயிலால் இந்தியாவின் கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது" - மத்திய அமைச்சர் எல்.முருகன் ! - உதயநிதி

Minister L Murugan: தமிழகத்திற்கு 10 ஆண்டுகளில் 11 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சி திட்டங்களை பாஜக அறிவித்துள்ளது என ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி
மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 7:58 PM IST

மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேட்டி

ஈரோடு:ஈரோட்டில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் துவக்க விழா இன்று (ஜன. 24) ஈரோடு ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய தகவல் ஒளிபரப்பு துறை மீன்வளம் பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

ரயில் சேவையை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில், "பாரதிய ஜனதா கட்சி அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரூபாய் 11 லட்சம் கோடி அளவிலான வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் விமான நிலையங்கள், நான்கு வந்தே பாரத் ரயில்கள், மேம்பாலங்கள், சாலைகள், ஏழைகளுக்கான வீடுகள், கழிப்பிடங்கள், குடிநீர் வசதி, விவசாயிகளுக்கான ரூபாய் 6000 ஆண்டுதோறும் மானியம் என பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

காங்கிரஸ் திமுக கூட்டணி 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 800 கோடி ஒதுக்கியது. ஆனால் நடப்பு நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ 6000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. ஒன்பது புதிய ரயில் வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் புதிதாக ஈரோடு, தாராபுரம், பழனி மார்க்கமாக புதிய ரயில் வழித்தடம் 75 ரயில்வே ஸ்டேஷன்கள் பன்னாட்டு தரத்திற்கு உயர்ந்து உள்ளன.

அதில் தமிழகத்தில் மட்டும் சென்னை எழும்பூர், காட்பாடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மதுரை, கோவை, சேலம் போன்ற ரயில் நிலையங்கள் அடங்கும். ரயில் பாதை நூறு சதம் மின்மயமாக்கப்பட்டுள்ளது. ஈரோடு ரயில் நிலையம் ரூபாய் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. ஈரோடு நெல்லை எக்ஸ்பிரஸ் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க செங்கோட்டை வரை தற்போது நீடிக்கப்படுகிறது.

2047க்குள் இந்தியா ஒரு வளர்ந்த தேசமாக வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது. நவீன் சக்தி என்ற திட்டத்தின பிரதமர் உள் கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு அதிக கவனம் செலுத்துகிறார். அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டதையும் பிரதமர் கலந்து கொண்டதையும் அனைவரும் வரவேற்கின்றனர். 500 ஆண்டு மக்களின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் வரலாறு கலாச்சாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி உருப்படாத ஒன்று, இளைஞர் அணி மாநாடு நமத்து போன மிக்சர் என்று சில பத்திரிகைகள் கூறியுள்ளன” என்றார். மேலும், தமிழகத்திலிருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்து 29 காசு திருப்பி தரப்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு அவர் பதில் அளிக்கையில் அந்தந்த மாநிலங்களின் தன்மைக்கு ஏற்ப நிதி உதவி செய்யப்படுகிறது என கூறினார்.

இதையும் படிங்க:“கண்ணு உங்க காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கிறேன்” - மாணவர்கள் காலில் சட்டென விழுந்த பாமக எம்.எல்.ஏ அருள்..

ABOUT THE AUTHOR

...view details