சென்னை: தாம்பரம் சானடோரியத்தில் தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி சிறப்பித்தனர். இந்த 3 மாடி கட்டடமானது 43.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படவுள்ளது.
அடிக்கல் நாட்டிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, தாம்பரத்தை மாநகராட்சியாக கடந்த 2021 ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அலுவலகம் கட்டப்பட வேண்டும் என்பதற்காக அரசு சார்பில் 43.40 கோடி நிதி ஒதுக்கி, வருவாய்த் துறையில் இருந்து தாம்பரம் மாநகராட்சிக்கு முதல்வர் வழங்கினார்.
இதில் சில நடைமுறைகளால் ஒரு வருடம் தாமதம் ஆகிவிட்டது. தற்போது நிதி வழங்கப்பட்டிருப்பதால் ஒரு வருடத்தில் தாம்பரம் மாநகராட்சி கட்டடம் கட்டி முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார்'' என்றார்.
இதையும் படிங்க:"திமுக பார்ட்டியில் ஜே.பி நட்டா" - ஜெயக்குமார் கூறும் மறைமுக கூட்டணி!