தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமநாதபுரத்தை புரட்டிப்போட்ட மழை: "ஒருநாள் சிரமத்தை பார்த்தால் ஏரிகள் எப்படி நிரம்பும்? அமைச்சர் கே.என்.நேரு கேள்வி! - MINISTER KN NEHRU

ராமநாதபுரத்தில் இன்னும் மழை நீர் வடியவில்லை என எழுப்பட்ட கேள்விக்கு "ஒரு நாள், இரண்டு நாள் சிரமத்தை பார்த்தால் ஏரிகள் எப்படி நிரம்பும்" என அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 10:46 PM IST

திருச்சி:பஞ்சப்பூர் பேருந்து முனையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது," திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் டிசம்பர் 31 க்குள் முடிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனை மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து லட்சம் பேர் வருகை தரும்படி இருக்கும். புதிய பேருந்து நிலையம் 430 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. மேலும் புதிய மார்க்கெட் 330 கோடி செலவில் கட்டப்பட்டு தயார் செய்ய உத்தரவுவிடப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

குடமுருட்டியில் இருந்து வயலூர் சோமரசம்பேட்டை சாலையை கடந்து பஞ்சபூருக்கு வரும் சாலை அமைக்க 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மற்றும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் இரண்டும் செயல்படும். பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் பேருந்துகள் தஞ்சாவூர் மட்டும் மத்திய பேருந்து நிலையம் செல்லாது. கரூர்,கோயமுத்தூர் செல்லக்கூடிய பேருந்துகள் மத்திய பேருந்து நிலையம் வழியாகத்தான் செல்லும் என்றார்.

இதையும் படிங்க:"மின் வாரியத்துக்கும் மத்திய அரசுக்கும் தான் தொடர்பு.. அதானி குழுமத்துடன் அல்ல!" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!

பின்னர் பஞ்சப்பூர் பேருந்து முனியத்தின் வெளியே போடப்பட்டுள்ள சீட் பழுதாகும் என கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,"பேருந்து நிலையத்தின் வெளியே போடப்பட்டுள்ள சீட்டிற்கு 20 வருடம் வாரண்டி கொடுத்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் இதேதான் போடப்பட்டுள்ளது. ஆனால் அங்கு யாரும் கேட்கவில்லை எங்களிடம் கேள்வி கேட்கின்றீர்கள்.

தொடர்ந்து ராமநாதபுரத்தில் மழை நீர் இன்னும் வடியவில்லை என்ற கேள்விக்கு, கடலோரம் அமைந்துள்ள மாவட்டம் அப்படி இருக்கையால்
மழைநீர் வடியவில்லை எனக் கூறுகிறீர்கள். ஆனால் மழை வந்தால் தான் ஏரிகள் நிரம்பும். ஏரிகளை நிரப்பும் பணியை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாள் இரண்டு நாள் சிரமத்தை பார்த்தால் 320 நாள் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஏர்களை நிரப்ப நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்" என தெரிவித்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் ர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details