சென்னை:தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார், ''தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க வேண்டும் என்றும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும்'' எனவும் கூறினார்.
இதற்கு பதில் அளித்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ வேலு, ''மாமல்லபுரம் சாலையில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளை ஏற்கனவே தமிழ்நாடு அரசு அகற்றியுள்ளது. தமிழகத்தில் அதிக சுங்கச்சாவடி வைத்துள்ள ஒன்றிய அரசுடன் தான் நீங்கள் (பாமக) கூட்டணி வைத்துள்ளீர்கள். சுங்கச்சாவடி அகற்றுவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்'' என்றார்.